Thursday 6 October 2011

இன்டர்நெட் இணைப்பை நிறுவ/துண்டிக்க சுலபமான வழி!


Android இயங்குதளம் நிறுவிய கைபேசியில் இன்டர்நெட் இணைப்பை எப்பொழுதும் ON செய்து வைத்தால் தேவை இல்லாமல் தகவல் பறிமாற்றம்(Data Transfer) நடைபெறுவது மட்டும் இல்லாமல், மின்கலம்(Battery) மிகவும் வேகமாக குறைத்து விடும்.



இதை இந்த சிறிய நிரல் பலகை (Widget) பயன்படுத்தி தேவைப்படும் நேரத்தில் மட்டும்  on செய்து பயன்படுத்தலாம். இதனால்  உங்கள் இன்டர்நெட் செலவை கட்டுபடுத்துவது மட்டும் இல்லாமல் உங்கள் மின்கலத்தையும் சேமிக்கும்.
அளவில் சிறிய இந்த நிரல் பலகையை Android மார்க்கெட் இன்னயதளத்தில் தரவிறக்கம்(டவுன்லோட்) செய்யலாம்.

சுட்டி:-  http://goo.gl/Ewb2N

பயன்படுத்தி பாருங்கள்! கருத்துகளை கூறுங்கள் !

Tuesday 23 August 2011

Youtube கண்ணொளி களை கைபேசியில் தரவிறக்கம் செய்யலாம்!

பல விதமான திரை இசை பாடல்கள், நகைச்சுவை காட்சிகள் Youtube தளத்தில் கண்டு ரசிக்கலாம். அவற்றை உங்கள் Android இயங்குதளம் நிறுவிய கைபேசியில் தரவிறக்கம் செய்ய TubeMate என்ற மென்பொருளை பயன்படுத்தலாம்.

Tubemate மென்பொருள் அளவில் சிறியது மற்றும் சிறப்பாக செயல் பட கூடியது.  உங்கள் விருபதிர்கேற்ப காணொளி களை இந்த மென்பொருள் கொண்டு தரவிறக்கம் செய்யலாம்.




TubeX  இலவசமாக Android Market தளத்தில் கிடைக்கிறது.


இங்க சொடுக்கவும் :-

பயன்படுத்தி பாருங்கள்! கருத்துகளை கூறுங்கள் !